உலகச் செய்தி

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் கண்டிக்கு விஜயம்

இலȨக໾க்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரித்தானிய உயர் ஸ்தானிகர், ஜேம்ஸ் டோரிஸ், இன்று கண்டிக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
British High Commissioner paid his respects at the Sacred Temple of the Tooth

British High Commissioner paid his respects at the Sacred Temple of the Tooth

அவர் புனித தந்தக் கோவிலுக்கு விஜயம் செய்து தன் மரியாதைகளைச் செலுத்தியதுடன், மல்வத்தை பீடத்தின் மிகவும் வணக்கத்துக்குரிய திப்பெட்டுவாவெ ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரோவையும் சந்தித்தார். அவர்கள் இலȨக໾யிலும் மற்றும் உலகெங்கிலுமான உள் நம்பிக்கையுடனான கலந்துரையாடல்களின் முக்கியத்துவம் பற்றிப் பேசினர்.

ஊடகங்களுக்கு கதைக்கும் பொழுது, உயர் ஸ்தானிகர்: “இலȨக໾யில் இருப்பதற்கும் மற்றும் பிரித்தானிய உயர் ஸ்தானிகராக எனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் போது கண்டியைப் பார்ப்பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நகரம் இலȨக໾யர்கள் பலருக்கும் நம்பிக்கையின் மையமாக ஒரு பாகத்தை வகிக்கிறது. புனித தந்தக் கோவிலுக்கு எனது மரியாதைகளைச் செலுத்துவதற்கும் மற்றும் மல்வத்தை பீடத்தின் வணக்கத்துக்குரிய மகாநாயக்கரைச் சந்திப்பதற்கும் கிடைத்த இந்த முன்கூட்டிய சந்தர்ப்பத்தைக் கொண்டிருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த நாட்டை ஒன்றிணைந்து தனித்துவமானதாக்கும் சமூகங்கள் பலவற்றினதும் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கும் நான் எதிர்பார்க்கிறேன்”, என்று குறிப்பிட்டார்.

திரு.டோரிஸ் மத்திய மாகாண ஆளுனர் கெளரவ. சுராங்கனி எல்லாவெல; கண்டி ஆயர் வணக்கத்துக்குரிய கலாநிதி ஜோசப் வியன்னி பெர்ணான்டோ; மற்றும் கண்டி நகர பிதா கௌரவ. மகேந்திர ரத்வத்தை ஆகியோரையும் சந்தித்தார். அவர் கண்டி கரிசன் மயானம் மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில் என்பவற்றுக்கும் விஜயம் செய்ததுடன், வரும் வெள்ளிக்கிழமை பொதுநலவாய யுத்த கல்லறை மயானத்தில் ஒரு மலர் வளையத்தையும் வைத்து மரியாதை செலுத்துவார்.

Updates to this page

வெளியிடப்பட்ட தேதி 30 ஏப்ரல் 2015