வடக்கில் ஐக்கிய இராச்சியத்தால் நிதியளிக்கப்படும் கண்ணவெடி அகற்றும் பகுதிகளுக்கு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்
ஆறு பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஓர் தூதுக்குழு இலȨகயின் வடபகுதிக்கு நேற்று விஜயம் செய்தது. அவர்களது மும்முரமான நிகழ்ச்சிநிரல், ஐக்கிய இராச்சியத்தால் நிதியளிக்கப்படும் கண்ணிவெடி அகற்றும் செயல் திட்டங்களை மேற்கொள்ளும் ‘ஹலோ டிரஸ்ட்’ எனும் அவர்களின் தர்ம ஸ்தாபனத்திற்கான விஜயத்தையும் உள்ளடக்கியிருந்தது.

The British Parliamentarians visited a UK-funded demining project in North.
மோதல்களின்போது கண்ணிவெடிகளின் பரவலான பாவனை பற்றியும் மற்றும் அபாயகரமான கண்ணிவெடிகளை அப்பகுதியிலிருந்து அகற்றி மக்கள் தங்கள் வீடுகளுக்கு மீள் திரும்புவதற்கு அன்றிலிருந்து மேற்கொள்ளப்படும் பாரிய முயற்சிகள் பற்றியும் அவர்கள் கேள்வியுற்றிருந்தனர். தூதுக்குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் எலெனர் லெயிங், “ஹலோ டிரஸ்ட் ஸ்தாபனத்தால் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கள் அனைவரினதும் முழுமையான பாராட்டுகள். மக்கள் அவர்களது சமூகங்களில் மீளக் குடியமர்த்தப்படுவதாயின் முன்னைய மோதல் பகுதிகளில் கண்ணிவெடிகளை அகற்றுதல் உண்மையிலேயே அத்தியாவசியமானது. அந்த மீள்குடியமர்தல் இலȨகயில் சமாதானத்தின் வளர்ச்சிக்கும் மற்றும் ஸ்திரத் தன்மைக்கும் அத்தியாவசியமானது. இந்த உயிர் காக்கும் முக்கியமான நிகழ்ச்சித் திட்டத்துக்கு உதவுவதற்காக பிரித்தானியா நிதியளிப்பதில் நாங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறோம். அது உண்மையிலேயே ஓர் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது.” என்று கூறினார்.