ஐக்கிய இராச்சிய – இலȨக உறவுகளைக் கொண்டாடுதல்: பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் கிரிக்கெட்
இலȨகக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், ஜோன் ரான்கின் பிரித்தானியாவுடனான வர்த்தகத்திற்கான சபையுடன் இணைந்து, இலȨக மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிகளுக்கான ஒரு வரவேற்பை, அவரது இல்லமான, வெஸ்ட்மினிஸ்டர் ஹவுசில், 27 நவெம்பர, 2014 அன்று அளித்தார்.

British High Commisioner with the English Cricket team
இந்த வரவேற்பானது, கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் ஐக்கிய இராச்சிய வர்த்தக மற்றும் முதலீடுப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட, “பிரித்தானிய வர்த்தகத்தை முன்னிடல்”, எனும் இலȨகக்கான ஒரு பெரும் ஐரோப்பிய வர்த்தகத் தூதுக்குழுவிற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த மாலைப் பொழுது இலȨக வர்த்தக சமூகத்துடன் வலையமைப்புகளை ஏற்படுத்துவதற்கு 21 பிரித்தானிய நிறுவனங்களிலிருந்து விஜயம் செய்யும் வர்த்தகப் பிரதிநிதிகளுக்கு ஒரு வாய்ப்பை அளித்தது..
இங்கிலாந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் அணியின் இலȨக விஜயம் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகளைக் கொண்டாடுவதற்கும் மற்றும் பவுண்டெஷன்ஸ் ஒப் குட்னஸிற்கான நிதி (Foundation of Goodness) நிதி சேகரிப்பதற்குமான ஒரு வாய்ப்பாகவும் உள்ளது. பிரித்தானிய உயர் ஸ்தானிகர் தெரிவித்தது:
“இலȨகயும் ஐக்கிய இராச்சியமும் ஒரு தனிச்சிறப்பான பரந்த மற்றும் பன்முக உறவுகளை அனுபவிக்கின்றன. இன்றைய மாலைப் பொழுதில் நாம் குறிப்பாக எங்களது வலுவான வர்த்தகத் தொடர்புகளிலும் மற்றும் கிரிக்கெட் விளையாட்டில் எங்களது பொதுவான ஆர்வத்தின் மீதும் கவனம் செலுத்துகிறோம். எங்களது இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கு இந்த வாரத்தின் நிகழ்வுகளின் ஒரு பகுதியாக 21 பிரித்தானிய நிறுவனங்கள் இந்த இரவு இங்கே உள்ளன. இன்றைய மாலைப்பொழுதில், அனைத்து இனத்துவ மற்றும் மதப் பின்னணிகளிலிருந்து இலȨகயிலுள்ள இளம் ஆட்களுக்கு ஆதரவு அளித்து மற்றும் ஒன்றாகக் கொண்டு வருவதில் பவுண்டெஷன்ஸ் ஒப் குட்னஸ் போன்ற தர்ம ஸ்தாபனங்களின் பணிகளையும் நாங்கள் பாராட்டுகிறோம். இந்த கிரிக்கெட் சுற்றுலாவின் எஞ்சியுள்ள போட்டிகளிலும் மற்றும் அடுத்த உலகக் கிண்ணப் பெருமைக்கான அவர்களின் வேட்கைக்கும் நல்ல அதிர்ஷ்டத்தையும் இரண்டு அணிகளுக்கு தெரிவிப்பதற்கும் நான் விரும்புகிறேன்.”
பவுண்டெஷன்ஸ் ஒப் குட்னஸின் பணிகளுக்கான ஆதரவிற்காக, வர்த்தகக் குழுவிற்கான மூன்று உத்தியோகபூர்வப் பங்காளர்களான ஸ்ரீ லங்கன் எயர் லைன்ஸ், குயின்டெஷனலி லைப் ஸ்டைல் மற்றும் சின்னம்மன் கிரான்ட் ஹோட்டல் என்பவற்றால் அன்பளிப்பு செய்யப்பட்ட பரிசுகளுடன் ஒரு சீட்டிழுப்பு நடைபெற்றது. ஜோன் கீல்ஸ், மோல்டிவியன் ரிசோர்ட்ஸ் மற்றும் டியாஜியோ என்பவற்றால் மேலதிக பரிசுகள் அளிக்கப்பட்டன.