இலȨகயில் சுகாதாரநலம்
ஆழமாக வேரோடிப் போயுள்ள இனப் பதட்டங்களை மறுத்தெதிர்ப்பதற்கான ஒரு நடுநிலை மேடை

British Sri Lankan doctors travelled to Sri Lanka to learn about healthcare issues on the island.
2012 நவெம்பரில், பிரித்தானிய இலȨகயர்களின் இரண்டாம் தலைமுறையினைச் சேர்ந்த நான்கு இளம் வைத்தியர்கள் நாட்டில் சுகாதாரநலம் தொடர்பான பிரச்சினைகளை கற்றறிந்து கொள்வதற்காக இலȨகக்கு விஜயம் செய்தனர். இந்த விஜயம், கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தினால் நிதியளிக்கப்படுகின்ற, சர்வதேச அலேர்ட்ஸின் புலம்பெயர்ந்தோர் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்த விஜயத்தின் போது, அவர்கள் பல சுவாரசியமான மற்றும் முன்னுதாரணமாக உள்ள ஆட்கள் பலரையும் சந்தித்ததோடு, போருக்குப் பிந்திய இலȨக முகம் கொடுக்கும் சிக்கலான பிரச்சினைகள் பற்றிய ஒரு புரிந்து கொள்ளுதலையும் பெற்றுக்கொண்டு ஐக்கிய இராச்சியம் திரும்பினர்.
இங்கே, மாலதி குணரட்ன இக்குழுவின் விஜயம் பற்றிய கருத்துக்களையும் அதேபோன்று ஐக்கிய இராச்சியம்-இலȨக சுகாதாரநல சமூகத்தில் தொடர்ந்து ஈடுபடுவதற்கும் மற்றும் இலȨகயில் செயல்திட்டங்களை முன்னெடுப்பதற்குமான அடுத்த நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்கிறார்.
முதலில் அந்நியர்களின் ஓர் குழுவான எங்களை ஒன்றிணைத்தது நாங்கள் ‘வைத்தியர்கள்’ என்ற அடைமொழியும் மற்றும் நாம் அனைவரும் இலȨகப் பாரம்பரியத்தை பகிர்ந்து கொண்டிருந்தமை என்பதும் மட்டுமேயாகும். நாங்கள் அனைவரும் இந்த வாய்ப்பு கிடைக்கப் பெற்றமைக்கு வரப்பிரசாதம் உடையவர்களாகவும் மற்றும் இலȨகயின் சுகாதாரநலப் பிரச்சினைகளை மாற்றியமைப்பதில் ஓர் பொதுவான ஆர்வத்தைக் கொண்டவர்களாகவும் இருந்ததோடு, அனைவரும் உரிமை கொண்டிருக்கின்றதும் மற்றும் புலம்பெயர் சமூகம் உறுதியான வகையில் பங்களிக்ககூடியதுமான வகையில் இலȨகயின் சமூகங்களுக்காக ஒரு அமைதியான எதிர்காலத்தை காண்பதற்குமான ஒரு விருப்புடன் இருப்பவர்கள் என்பதும் விரைவிலேயே தெளிவானது.
எங்களது எட்டு நாள் விஜயம் காலி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கொழும்பு ஆகிய இடங்களுக்கு எங்களை இட்டுச் சென்றது. இடங்களுக்கிடையில் வீதிகளில் பயணம் செய்த நேரங்கள் எங்களில் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பைத் தந்தது. நாங்கள் சுகாதாரநலம், அரசியல் மற்றும் ஆழமாக வேரோடிப் போயுள்ள இனப் பதட்டங்கள் பற்றி கலந்துரையாடினோம். ஓர் சிங்களப் பாரம்பரியப் பின்னணியுடன், மோதல் குறித்து ஐக்கிய இராச்சியத்திலுள்ள புலம்பெயர் சமூகக் குழுக்களிடையேயான “தமிழ்க் கருத்து” பற்றி அறிந்து கொள்வதில் நான் ஆர்வமாயிருந்தேன். இந்த விடயம் மீதான எங்களது எண்ணங்கள் மற்றும் அபிப்பிராயங்கள் என்பவற்றை வெளிப்படையாக கலந்துரையாடுவதற்கு அனுமதிக்கும் ஒரு வகையில் எங்களது குழுவின் ஆற்றல் விருத்தியடைந்தது எனபதை நான் உணர்ந்தேன். எங்களது விஜயத்தின் தன்மை, கலந்துரையாடுவதற்கு அதிகம் தவிர்க்கப்படுகின்ற இல்லாவிட்டால் அசௌகரியமானதுமான தலைப்புகளின் கலந்துரையாடலுக்கான ஓர் அரிதான நடுநிலையான களத்தை வழங்கியது.
பாதையில்
எங்களது மருத்துவ விஜயங்களின் போது, தமிழ் குழு உறுப்புனர்களுடன் இருந்தமை, ஓர் சிங்களப் பெரும்பான்மை கொண்ட பிரதேசத்தில் (உ-ம்: கொழும்பு அல்லது காலி) ஓர் தமிழ் நோயாளியால் சுகாதாரநலங்கள் எவ்விதம் அனுபவிக்கப்பட்டிருக்கும் என்பதை எனக்கு கூர்மையான விதத்தில் அறியப் பண்ணியது. வார்ட்களில் புத்த சிலைக்கு அருகில் இந்துக் கடவுள் சிலையைத் தவிர்த்தல் போன்று, சிறிய கலாச்சார விடயங்களுக்கு கூருணர்வைக் கொண்டிராது விடல், ஒரு தமிழ் நோயாளிக்கு சுகாதரநலங்கள் மூலமான அவரது பயணத்தில் மாற்றங்களை ஏற்படுத்தலாம், ஆனால் இவை அதிகம் கவனத்தில் கொள்ளாமல் விடப்படுகின்றன. இன மற்றும் புவிசார் எல்லைகளை உடல்நலக் குறைவு மதிக்குமாயின் இதுவொரு பிரச்சினையல்ல.
எவ்வாறாயினும், ஓர் இருக்கின்ற சமூகத்தில் சிறுபான்மையின நோயாளிகளுக்கு இது ஓர் மிகவும் உண்மையான பிரச்சினையாக உள்ளதுடன், நாடு முழுவதிலுமாக விசேட நிபுணர்களின் சேவைகள் கிடைக்கப் பெறாத காரணத்தால், நோயாளிகள் தங்கள் சொந்தப் பிரதேசங்களை விட்டு வெளிப் பிரதேசங்களுக்கு பிரயாணிக்க வேண்டிய பொழுது மேலும் மோசமானதாகின்றது. உதாரணத்துக்கு, எங்களது விஜயத்தின் போது, யாழ்ப்பாணத்தில் ஓர் நரம்பியல் சத்திரசிகிச்சை அல்லது இதயநரம்புப் பிரச்சினையுடனான ஒரு நோயாளி இந்த விசேட நிபுணர் பராமரிப்பைப் பெறுவதற்கு அண்மையிலுள்ள சிகிச்சை நிலையமான கண்டிக்கு பயணம் செய்தாக வேண்டும். வாசித்து அறிந்து கொள்ள முடியாத மொழியில் அனைத்து பெயர் பலகைகளும் உள்ள, விளங்கிக் கொள்ள முடியாத மொழியைப் பேசுகின்ற மக்களுள்ள ஒரு இடத்தில் நீங்கள் சுகவீனத்துடன் நலிவடைந்தவராக அச்சத்துடன் இருக்கையில், உங்களை சௌகரியப்படுத்துவதற்கு பரிச்சயமான எதுவுமே இல்லாத ஒரு சூழலை கற்பனை செய்து பாருங்கள். இத்தகைய நோயாளிகள் ஓர் சிறிய தொகையினராக இருந்தாலும், சுகாதாரநல தொழில்சார் தகைமையாளர்களாக எங்களது வகிபாகம், நோயாளிகள் அனைவரினதும் மதிப்பை உறுதிப்படுத்தி அவர்களது கௌரவத்தைப் பேணுவதாகும்.
சுகாதாரநலத்தில், இந்த புவிசார் பிரிவு ஓர் உண்மையான பிரச்சனையைத் தோற்றுவிக்கும் மற்றொரு பரப்பு, மனநலத்திற்குட்பட்ட பிரிவாகும். ஓர் பெரும் மையப்படுத்தப்பட்ட மனநல சுகாதார சேவையென்பது, ஓர் மனநலச் சீரின்மையுடன் அனைத்து இனங்களிலும் இருந்தான இடர்படு நிலையிலான நோயாளிகள் வீட்டிலிருந்து பல மைல்கள் தொலைவில், பெரும் நிலையங்களில் உள் நோயாளிகளாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய தேவையைக் கருதுகின்றது. இதனால், அவர்களின் குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் பழக்கமான சூழல் என்பவற்றிலிருந்து அவர்கள் அகற்றப்படுகின்றனர். போருக்குப் பிந்திய ஒரு தேசமாக, மோதல்களுக்கு அதிகம் வெளிப்படுத்தப்பட்டமை மனநலச் சீர்குலைதல்கள் ஏற்படுவதற்கு மக்களை கூடுதல் இடராபத்தில் இட்டுள்ளதால், இது, இலȨகக்கு குறிப்பாக பொருத்தமானதாக அமைகின்றது.
ஏனைய பல சுகாதாரநலப் பிரச்சினைகளும் இந்த விஜயத்தின் போது எங்களுக்கு சுட்டிக் காட்டப்பட்டன. இந்தப் பிரச்சினைகளில் சில ஓர் போருக்கு பிந்திய நாட்டுக்கான பிரத்தியேகமானவையாக இருந்தன. ஏனையவை துரித பொருளாதார அபிவிருத்திக்கு உட்படுகின்றதும் மற்றும் நோய் பரவுகின்றதிலிருந்து பரவாமைக்கான மாற்றத்திற்கு முகங்கொடுக்கின்ற அல்லது நீடித்த சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற ஒரு நாட்டினால் முகங்கொடுக்கப்படுகின்ற பிரச்சினைகளாக இருந்தன. உதாரணத்துக்கு, மனநலச் சுகவீனத்துடன் இணைந்த அவப்பெயர், பாலியல் சுகாதாரம், பாலியல் கல்வி மற்றும் பால்நிலை அடிப்படையிலான வன்முறை என்பன, சுகாதாரநலத்தை மதிப்பீடு செய்வதில் பெரும் தடைகளாக செயற்பட முடியும். நீடித்த நோய்களை முகாமைத்துவம் செய்வதில் முக்கியமான வகிபாகத்தைக் கொண்ட தொடர்புபட்ட சுகாதார தொழில்சார் தகைமையாளர்களுக்கு போதுமான பயிற்சிகளில்லாமை மீண்டும் மீண்டும் விபரமாக கலந்துரையாடப்பட்ட மற்றொரு விடயமாகும்.
எங்களது குழுவினிடையேயான கலந்துரையாடலில் இருந்தும் அதேபோன்று விஜயத்தின் போது நாங்கள் சந்தித்தவர்களுடனான கலந்துரையாடலில் இருந்தும் ஒரு விடயம் எங்களுக்கு மிகவும் தெளிவாகியது. வேறுபட்ட இனக் குழுக்கள் எங்கு வசிக்கின்றனர் மற்றும் அவர்கள் எங்கே சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர் என்பதிலிருந்து, பாடசாலைகளில் அவர்களுக்கு கற்பிக்கப்படும் மொழி, அவர்கள் போவதற்கு தெரிவு செய்யும் பல்கலைக் கழகங்கள் மற்றும் நண்பர்களாக கொண்டிருப்பதற்கு சௌகரியமாக அவர்கள் உணரும் ஆட்கள் என்பது வரை இலȨக மற்றும் வெளிநாடுகளிலும் வாழும் வேறுபட்ட இனக் குழுக்களிடையே பல வரம்பெல்லைகள் உள்ளன. மக்களின் மனங்களினுள்ளேயே பல வரம்பெல்லைகள் உள்ளன. இந்த வரம்பெல்லைகளை உடைப்பதற்கு மறைமுகமாக ஒரு அக்கறையின்மை காணப்படுவது, இன்னமும் மோசமான நிலையாகும். பாதுகாப்பாக உணர்வதும், சமூகத்தில் அங்கீகரிக்கப்பட்டு உள்ளிணைத்துக் கொள்ளப்படுவதும் முக்கியமானதாகும். அத்தகைய உணர்வுகள் நன்னிலையை மேம்படுத்தும். ஆரோக்கியம் என்பது நன்னிலைகளின் ஓர் மேம்படுத்தலாக வரைவிலக்கணப்படுத்தப்படுதல் வேண்டுமேயன்றி வெறுமனே நோய்கள் இல்லாத ஒரு நிலைமையல்ல. இதனை மனதில் கொண்டால், தற்போதைய இலȨகயின் நிலைமை இலȨகயர்களின் நலத்திற்கும் நன்னிலைகளுக்கும் சிறந்ததாக இருக்க முடியாது.
நல்லவேளையாக, உள்ளிணைக்கும் செயன்முறையை அபிவிருத்தி செய்வதில் இலȨகக்கான முக்கியத்துவத்தை முன்னோக்கிப் பார்ப்பதில் தனிப்பட்டவர்களும் மற்றும் அமைப்புகளும் உள்ளன. சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மருத்துவ மாணவர்கள், மற்றும் ஆசிரியர்களின் கூடுதல் விகிதாசாரக் கூட்டையும் மற்றும் ‘சமாதான மருத்துவம்’ மற்றும் ‘முரண்பாடு தீர்த்தல்’ என்பவற்றை அதன் பட்டபடிப்பு பாடவிதானத்தின் பகுதியாகவும் கொண்ட ஓர் மருத்துவக் கல்லூரியாக கிழக்குப் பல்கலைக கழக மருத்துவ பீடம் வழி காட்டுகின்றது. மேலும் கிழக்கில், ஓர் தர்ம ஸ்தாபனமான வண்ணத்துப்பூச்சிப் பூங்கா வேறுபட்ட இனக் குழுக்களிடையே புரிந்துணர்வு மற்றும் உள்ளிணைக்கப்படுதலையும் மேம்படுத்தும் ஒரு வகையில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுடன் செயலாற்றுகின்றது.
எங்களது அனுபவங்களை புலம்பெயர் சமூகங்களுடன் பகிர்தல்
டிசம்பர் 2012 இல், ஐக்கிய இராச்சிய – இலȨக மருத்துவ சமூகம் மற்றும் சிவில் சமூகம் என்பவற்றிலிருந்தான தனிப்பட்டவர்கள் மற்றும் அமைப்புகளின் விஜயங்களிலிருந்தான பிரதான கண்டறிதல்களை நாங்கள் சமர்ப்பித்தோம். அத்தோடு, தமிழ், முஸ்லிம், சிங்கள மற்றும் பறங்கியர் சமூகங்களைச் சார்ந்த ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்ட சுகாதாரத்துறை தொழில்சார் தகைமையாளர்கள் நாடு முழுவதிலுமாக உறுதியான சுகாதார பெறுபேறுகளுக்கு உதவியளிப்பதற்கு இலȨகயிலுள்ள அவர்களது சகாக்களுடன் ஒருத்தருக்கொருத்தர் எவ்விதம் இணைந்து பணியாற்றலாம் என்பதைக் கலந்துரையாடுவதற்கான ஒரு அரங்கையும் நாங்கள் வழங்கினோம்.
இலȨகயிலுள்ள மருத்துவ பீடங்களுடனான ஓர் கூட்டு ஒத்துழைப்புடன், பிரித்தானிய மற்றும் இலȨக மருத்துவ மாணவர்களுக்கான ஓர் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் உட்பட, சுகாதாரப் பெறுபேறுளை மேம்பமடுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தை முன்னேற்றுதல் என்பவற்றுக்கான பல பயனுள்ள யோசனைகளை குழு கலந்துரையாடியது. பிரித்தானிய தமிழ் மாணவர்கள் தங்களது பரிமாற்றத்தின் ஒரு பகுதியை இலȨகயின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும் மற்றும் பிரித்தானிய சிங்கள மாணவர்கள் தங்களது பரிமாற்றத்தின் ஒரு பகுதியை இலȨகயின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் செலவிடுவதற்கு இந்த நிகழ்ச்சித்திட்டம் ஊக்குவித்தல் வேண்டும். .
இந்த விதத்தில் ஒன்றாகப் பணியாற்றுவதன் மூலம், இலȨக மற்றும் இங்கே ஐரோப்பிய இராச்சியம் ஆகிய இரண்டிலுமுள்ள இலȨகயின் வேறுபட்ட இனக் குழுக்களிடையே பேச்சுவார்த்தைக்கான ஒரு களமாக குழு செயலாற்றுவதுடன் புரிந்துணர்வை விருத்தி செய்வதற்கும் அது உதவுகின்றது, என நாம் நம்புகின்றோம். புலம்பெயர் சமூகத்தின் ஒரு உறுப்பினராக, ஒருவரின் அடையாளத்தை பற்றிப் பிடித்தும் மற்றும் சொந்த நாட்டில் தனது சமூகத்துக்கு தொடர்புபடுத்தி ஏதேனையும் திரும்ப அளிப்பதற்கு இயலும் வகையிலான ஓர் தீவிரமான ஆர்வத்தை உணர்வதை விட, ஒருவரது பூர்வீக நாட்டின் தொடர்பற்று இருப்பதை உணர்வது இலகுவானது. நாங்கள் அனைவரும் எதனை எதிர்பார்ப்பது எனத் தெரியாமல் இலȨகக்கு சென்றதுடன் இலȨக எதிர்கொள்ளும் சுகாதாரநலச் சவால்களை அறிந்து கொண்டு வந்தவர்களாக வந்தது மட்டுமின்றி ஒரு சிறிய மாற்றத்தினை ஏற்படுத்தியமை பற்றி ஊக்கமும் மகிழ்ச்சியும் கொண்டவர்களாகவும் திரும்பி வந்தோம்.
இயலுமான வரை அனைத்து புலம்பெயர் சமூகங்களிலிருந்தும் சுகாதரநல தொழில்சார் தகைமையாளர்கள், சங்கங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் ஆகியோரை ஈடுபடுத்துவதில் குழு ஆர்வம் கொண்டுள்ளது. நீங்கள் சம்பந்தப்படுவதற்கு விரும்பினால், தயவுசெய்து மீரா சிந்தூரிக்கு mchindooroy@international-alert.org. எனும் முகவரியில் மின்னஞ்சலை அனுப்பவும்.