இலȨகயில் அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கான உரிமையின் பாதுகாத்தலை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வலியுறுத்துகிறார்
அலிஸ்டெயர் பேர்ட்: அமைதியான ஆர்ப்பாட்டத்துக்கான உரிமையைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதையும் மற்றும் ஓர் துரிதமான மற்றும் வெளிப்படையான புலன் விசாரணையை உறுதிசெய்வதற்கும் நான் அதிகாரத்திலுள்ளவர்களை வேண்டிக் கொள்கிறேன்.

FCO Minister urges protection of rights to peaceful protest in Sri Lanka
இன்று பேசுகையில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர். அலிஸ்டெயர் பேர்ட் கூறியது:
“ஆகஸ்ட் 1ஆம் திகதி, வெலிவேரியவில் இலȨக இராணுவத்தால் அமைதியான ஆர்ப்பாட்டம் வன்முறை ரீதியாக குழப்பப்பட்டு, அதில் குறைந்தது 3 பொதுமக்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக வரும் அறிக்கைகளை நான் தீவிரமான கவலையுடன் நோக்குகிறேன்.
இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டவர்கள் அல்லது காயப்பட்டவர்களின் குடும்பத்தவர்களோடு எனது எண்ணங்கள் உள்ளன.
அமைதியான ஆர்ப்பாட்டத்துக்கான உரிமையைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதையும் மற்றும் ஓர் துரிதமான மற்றும் வெளிப்படையான புலன் விசாரணையை உறுதிசெய்வதற்கும் நான் அதிகாரத்திலுள்ளவர்களை வேண்டிக் கொள்கிறேன்.”