பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயதினால் வெளியிடப்படும் அறிக்கை
இலȨகயின், தங்காலையில் விடுமுறையில் இருந்தபோது, பிரித்தானியப் பிரஜையான குராம் ஷாயிக் படுகொலை செய்யப்பட்டும், மற்றும் அவரது துணையான விக்டோரியா தாக்குதலுக்குள்ளாகியும் இப்பொழுது 18 மாதங்களாகிவிட்டது.

Khuram Shaikh
இது தொடர்பான வழக்கு நடவடிக்கைகள் இன்னமும் ஆரம்பிக்கப் படாதது குறித்து பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் ஆழ்ந்த ஏமாற்றமடைகின்றதுடன்,மிகுந்த கவலையடைகின்றதுடன், இந்த படுபாதகமான குற்றத்தின் குற்றவாளிகள் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவதற்கு தொடர்ந்தும் அழைப்பு விடுக்கின்றது. நீதி நிலை நாட்டப்படுவது ஷாயிக்கின் குடும்பத்துக்கு முக்கியமானதைப் போலவே, இலȨகக்கு வருடாந்தம் விஜயம் செய்யும் ஏனைய சுற்றுலாப் பயணிகளின் மனதிற்கும் சில உத்தரவாதத்தையும் மற்றும் அமைதியையும் அது கொண்டு வரும்.