காணாமற்போனவர்களுக்கான சர்வதேச தினம் குறித்து உள்நாட்டு ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கை
இலȨகயிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தலைமைகளின் உடன்பாட்டுடன் ஐரோப்பிய ஒன்றியத் பிரதிநிதி குழு பின்வரும் அறிக்கையை வெளிவிடுகின்றது:

In Sri Lanka, thousands of people disappeared during the war.
“காணாமற்போனவர்களுக்கான சர்வதேச தினத்தன்று, கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி குழு பலவந்தமாக மற்றும் தன்னிச்சையில்லாது காணாமற் போதல்களுக்கு உள்ளானவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான அதன் ஆதரவை மீள் வலியுறுத்துகிறது. பாதிக்கப்பட்டவர்களின் அன்பிற்குரியவர்களுக்கு உதவுவதற்கும் மற்றும் முடிவுறுத்துதல் மற்றும் நீதிக்காக பாடுபடும் அனைவருக்கும் ஐரோப்பிய ஒன்றியமும் கூட தனது வணக்கத்தை தெரிவிக்கிறது.
இலȨகயில், யுத்தத்தின் போது ஆயிரக் கணக்கானவர்கள் காணாமற் போயினர். பல சம்பவங்கள் 1970கள் மற்றும் 1980களில் தெற்கிலான அமைதியின்மை காலங்களினவையாக திகதியிடப்படுகின்றன. ஏனையவை, மிக அண்மைக் காலங்களிலானவையாக, யுத்தத்தின் போதும் மற்றும் பின்னருமாகவென, நாடு முழுவதிலுமான மக்களைப் பாதித்துள்ளது. தங்கள் உறவினர்களுக்கு என்ன நடந்துள்ளது என்பது பற்றிய உண்மையை பல குடும்பங்கள் இன்னமும் தேடுகின்றன.
இந்தப் பின்னணியில், யுத்த காலத்தின் போதான காணாமற்போதல்களை புலன் விசாரணை செய்வதற்கு ஓர் ஜனாதிபதி ஆணைக்குழுவின் நியமனத்தை அண்மைய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி குழு கவனத்தில் கொள்கிறது. சர்வதேச நியமங்களுடன் ஒத்ததாக நம்பத்தகுந்த மற்றும் வெளிப்படையான புலன் விசாரணைகளை உறுதிசெய்வதற்கு உதவி, அதன் முக்கியமான மற்றும் சவால் மிக்க பணியை வைராக்கியம் மற்றும் சுயாதீனத்துடன் ஆணைக்குழு அணுகும் என பிரதிநிதி குழு நம்புகிறது.
இந்த சவாலான பணியுடன் உதவுவதற்கு இயலுமான சர்வதேசப் பங்காளர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு பிரதிநிதிகள் குழு இலȨக அரசாங்கத்தை ஊக்குவிக்கிறது. நிலுவையிலுள்ள தனிப்பட்டவர்களது காணாமற்போதல் தொடர்பான விடயங்கள் குறித்து பதிலிறுப்பதற்கும் மற்றும் பலவந்தமான அல்லது தன்னிச்சையில்லாத காணாமற்போதல்கள் மீதான ஐக்கிய நாடுகள் செயற்குழுவை நாட்டுக்கு விஜயம் செய்வதற்காக வேண்டிக்கொள்வதற்கு அனுசரனை அளிப்பதற்கும் இலȨக அரசாங்கத்தை அது ஊக்கப்படுத்துகிறது.
“பலவந்தமான காணாமற்போதல்களை குற்றவியல் குற்றமாக்கும் சட்டத்தை நிறை வேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிடுவதை தெரிவிக்கும் அறிக்கைகளை பிரதிநிதிகள் தூதுக்குழு கவனத்தில் கொள்வதுடன் இது தொடர்பான மேலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறது”
கடந்த கால காணாமற்போதல்களைக் கையாள்வதும், மற்றும் புதிதாக காணாமற் போதல்களைத் தடுப்பதும், நாடு முன்னோக்கி நகர்வதற்கு உதவுவதிலான முக்கியமான படிமுறைகளாகும்.”