பிரித்தானிய உயர் ஸ்தானிகர் தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதி சிறிசேனவிடம் கையளித்தார்
இலȨகக்கான புதிய உயர் ஸ்தானிகர், திரு.ஜேம்ஸ் டோரிஸ், மாட்சிமை தாங்கிய இராணி எலிசபெத் II இடமிருந்தான தனது நியமனக் கடிதத்தை, ஏப்பிரல் 29, 2015 அன்று, கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஒரு உத்தியோகபூர்வ வைபவத்தில், மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம், சமர்ப்பித்தார்.
Mr. James Dauris, British High Commissioner to Sri Lanka.
உயர் ஸ்தானிகர், இலȨக அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் நிறைவேற்றுதல் தொடர்பாக ஜனாதிபதி சிறிசேனவைப் பாராட்டியதுடன் நீண்ட காலமாக இலȨக மற்றும் ஐக்கிய இராச்சியம் அனுபவித்து வந்த வலுவான உறவின் பின்னணியில் இலண்டனிற்கான ஜனாதிபதியின் அண்மைய விஜயத்தையும் வரவேற்றார்.
திரு.ஜேம்ஸ் டோரிஸ் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் 1995 இல் இணைந்து கொண்டதுடன் மிக அண்மையில் பெரு நாட்டுக்கான பிரித்தானியத் தூதுவராகக் கடமையாற்றினார். அதற்கு முன், கொலம்பியா மற்றும் மொஸ்கோவில் அவர் சேவை ஆற்றியுள்ளார்; அத்தோடு அவர் தெற்காசியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய விடயங்கள் தொடர்பாக இலண்டனில் பணியாற்றியுள்ளார்.
திரு. டோரிஸ் இலண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலிருந்து சட்டத்துறையிலான பட்டப்படிப்பைக் கொண்டுள்ளதுடன் வெளியுறவு மற்றும் பொதுநலவாய அலுவலகத்தில் இணையும் முன் பல வருடங்களாக இலண்டன் நகரில் ஒரு வழக்குரைஞராக பணியாற்றியுள்ளார்.