ஐக்கிய இராச்சிய – இலȨக உயர் கல்விப் பங்குடமை உயிரியல் மருத்துவ விஞ்ஞானிகளை உருவாக்குகிறது
நோர்த்தும்பிரியாப் பல்கலைக் கழகம் மற்றும் பி.எம்.எஸ் (BMS) என்பன இலȨகயில் நோர்த்தும்பிரியா உயிரியல் மருத்துவப் பட்டப்படிப்பை ஜூன் 16, 2015, செவ்வாய்க் கிழமை அன்று ஆரம்பித்துள்ளமை பற்றி அறிவித்தன.
The launch of Degree will help Sri Lanka to train up more professional biomedical scientists.
பட்டப் படிப்பு இலȨகக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் இலȨக சுகாதார மற்றும் சுதேசிய மருத்துவ அமைச்சர் கௌரவ வைத்தியர் ராஜித சேனாரத்ன ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பி.எம்.எஸ். மற்றும் நோர்த்தும்பிரியா பல்கலைக் கழகத்திற்கிடையிலான பன்னிரென்டு வருட நீண்ட பங்குடமையில் இது மற்றுமொரு மைல் கல்லாகும்.
நியுகாசலைத் தளமாகக் கொண்ட, நோர்த்தும்பிரியா பல்கலைக் கழகம் பிரித்தானியாவின் சிறந்த நவீன பல்கலைக் கழகங்களில் ஒன்றாக மதிப்பைப் பேணுகிறது. நோர்த்தும்பிரியா பல்லைக் கழக வர்த்தகக் கல்லூரி, வர்த்தகக் கல்லூரிகளுக்கான தரச் சான்றளிக்கும் ஒரு உலக அமைப்பான, AACSB இனால் சான்றளிக்கப்பட்டமை நோர்த்தும்பிரியாப் பல்கலைக் கழகத்தை உலககெங்கிலுமான வர்த்தகக் கல்லூரிகளின் 5% மட்டுமேயான ஒரு உயர்வான குழுவில் இட்டுள்ளது. இலȨகயிலுள்ள ஒரு முன்னணி உயர் கல்வி நிறுவனமான பி.எம்.எஸ், ஐக்கிய இராச்சியத்திலுள்ள தகுதி வாய்ந்த பல்கலைக் கழகங்களுடனான அதன் பங்குடமைகள் ஊடாக மாணவர்கள் இலȨகயில் கல்வி கற்கும் போதே சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத் தகுதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதிக்கிறது. பி.எம்.எஸ் தலைவர், டபிள்யு. ஏ. விஜயவர்த்தன கலை ஆய்வு கூடங்களின் நிலை உட்பட நவீன வசதிகளை வழங்குவதற்கு முதலீடு செய்துள்ளது என அறிவித்தார். துறைசார் நிபுணத்துவ விரிவுரையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் உயர் தரத்திலான கற்றல் சூழ்நிலைக்கு அனைத்து மாணவர்களும் உத்தரவாதப்படுத்தப்படுகின்றனர்.
பிரித்தானிய உயர் ஸ்தானிகர், திரு.ஜேம்ஸ் டோரிஸ், தனது செய்தியில், “இலȨக மாணவர்களுக்கு ஐக்கிய இராச்சியக் கல்வி கூடுதலாகக் கிடைப்பதற்கு கடந்த பன்னிரெண்டு வருடங்களாக அவர்கள் மேற்கொள்கின்ற அனைத்து முயற்சிகளுக்குமாக நோர்த்தும்பிரியாப் பல்கலைக் கழகம் மற்றும் பி.எம்.எஸ் என்பவற்றை நான் பாராட்டுகிறேன். உயிரியல் மருத்துவ விஞ்ஞானத்தில் நோர்த்தும்பிரியா பல்கலைக் கழகத்தின் விஞ்ஞானமானி பட்டப்படிப்பின் ஆரம்பம், இலȨகயில் வலுவான மருந்தியல் மற்றும் மருத்துவப் பரிசோதனைத் தொழில்களைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான திறமைகளுடனான ஆட்களாக, தொழில்சார் உயிரியல் மருத்துவ விஞ்ஞானிகளை கூடுதலாகப் பயிற்றுவிப்பதற்கு இலȨகக்கு உதவும். எங்களது இரு நாடுகளும் அனுபவிக்கும் மற்றும் நீண்ட காலமாக அனுபவித்த முக்கியமான மற்றும் பல்வேறுபட்ட கல்வித் தொடர்புகளுக்கு இந்தப் பட்டப்படிப்பு வரவேற்கப்படுகின்ற ஒரு மேலதிக சேர்க்கையாக இருக்கும். நோர்த்தும்பிரியா பல்கலைக் கழகம் மற்றும் பி.எம்.எஸ் என்பவற்றுக்கிடையில் ஏற்படுத்தப்பட்ட இது போன்ற புத்தாக்க வகையிலான பங்குடமைகள் துறைகளின் ஒரு பரந்துபட்ட பரப்புகளுக்கு குறுக்கே இரு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்புகளை வலுப்படுத்தும்,” என்று கூறினார்.
அமைச்சர், வைத்தியர். ராஜித சேனாரத்ன, “இலȨக அரசாங்கம் எங்களது மக்களுக்காக சிறந்த சுகாதார சேவையை வழங்குவதற்கு பற்றுறுதி கொண்டுள்ளது. சுகாதாரப் பராமரிப்புக் கொள்கையின் ஒரு உள்ளார்ந்த பகுதியாக, மருத்துவத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு தொழில்சார் தகைமையான விஞ்ஞானிகள் எங்களுக்குத் தேவை,” என்று கூறினார். நாட்டுக்காக தொழில்சார் தகைமையான விஞ்ஞானிகளை உருவாக்குவதற்கான அவர்களது பற்றுறுதிகளுக்கு இரண்டு நிறுவனங்களினதும் முயற்சிகளை அமைச்சர் பாராட்டினார். நிலையான பொருளாதார அபிவிருத்திக்கு முக்கியமானவர்களாக இருக்கக்கூடிய தகுதிவாய்ந்த பட்டதாரிகளை தாங்கள் உருவாக்கின்றனர் என உயர் கல்வி கற்பிக்கும் இரண்டு நிறுவனங்களும் வெளிக்காட்டியுள்ளன என அவர் மேலும் கூறினார்.
நோர்த்தும்பிரியாப் பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு உள்வாரிப் பட்டபடிப்பான உயிரியல் மருத்துவ விஞ்ஞானமானி பட்டப்படிப்பை பி.எம்.எஸ் இல் முதற் தொகுதி மாணவர்கள் ஆரம்பிப்பர்.