உலகச் செய்தி

‘இலȨக໾யில் மனிதாபிமானப் பணிகளுக்காக ஐக்கிய இராச்சியம் 20 மில்லியன் பவுண்சுகளுக்கும் அதிகமான தொகை உதவி’

உலக மனிதாபிமான தினத்தைக் குறிக்கும் முகமாக பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அறிக்கை வெளியீடு

2010 to 2015 Conservative and Liberal Democrat coalition government-ன்கீழ் இது வெளியிடப்பட்டது
A six member delegation of British Parliamentarians visited the North of Sri Lanka last month and witnessed the UK funded demining programme.

A six member delegation of British Parliamentarians visited the North of Sri Lanka last month and witnessed the UK funded demining programme.

ஆகஸ்ட் 19, திங்கட் கிழமை, ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தால் அறிவிக்கப்பட்ட மனிதாபிமான தினம், அனைத்து மனிதாபிமானப் பணியாளர்களையும் அங்கீகரிப்பதுடன், 2003இல் பாக்தாத்தின் ஐக்கிய நாடுகள் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில், தங்களது உயிர்களை இழந்த 22 பேர்களின் நினைவுதினத்தைக் குறிக்கும் முகமாகவும் ஏற்படுத்தப்பட்டது.

இலȨக໾யின் போருக்குப் பிந்திய மீளுதலுக்கு உதவுவதற்கு 2011 இன் ஆரம்பத்திலிருந்து £20 மில்லியன் பவுண்சுகளுக்கும் அதிகமான (3.8 பில்லியன் ரூபாய்கள்) தொகையை ஐக்கிய இராச்சியம் வழங்கியுள்ளது.
இந்த முக்கியமான நாளின் பத்தாவது ஆண்டுநிறைவில் கருத்துத் தெரிவித்த இலȨக໾ மற்றும் மாலைதீவுகளுக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், ஜோன் ரன்கின் அவர்கள்:

‘உலக மனிதாபிமான தினம், இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட அனர்த்தங்கள் மற்றும் மோதல்களில் அனைத்தையும் இழந்தவர்களுக்கு உலகெங்கிலுமாக பல பணிகள் செய்யப்படுவதற்கு இருப்பதை எங்களுக்கு புதிதாக நினைவுபடுத்துகிறது. மேலும் முக்கியமாக, மற்றையவர்களுக்கு உதவுவதற்காக தங்களது வாழ்வை அர்ப்பணிக்கின்றவர்களின் தன்னலமில்லா மற்றும் ஊக்கமளிக்கின்ற முயற்சிகளையும் அது சுட்டிக்காட்டுகின்றது.
ஓர் பெரும் அனர்த்தத்தின் பின்னர் உடனடியாகவே மனிதாபிமானப் பணிகள் தேவை என நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அது நீண்ட காலத்துக்கு தேவைப்படும் என்பதை நினைவில் கொள்வதும் கூட முக்கியமானதாகும். உதாரணத்துக்கு, 2009 இல் யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து இலȨக໾யில், கண்ணிவெடிகளின் அகற்றுதலுக்கு தொடர்ச்சியான கேள்வியிருந்தது. இலȨக໾யில் ஹலோ டிரஸ்ட் தர்ம ஸ்தாபனத்தின் கண்ணிவெடி அகற்றல் பணிகளுக்கு நிதியளித்தல் உட்பட, இதற்கு ஐக்கிய இராச்சிய அரசாங்கம் ஆதரவளிக்கிறது. இந்த ஐக்கிய இராச்சிய தரும ஸ்தாபனம் அனைத்துப் பிரஜைகளுக்கும் இடர்களற்ற, பாதுகாப்பான மற்றும் சகஜநிலைக்கான ஒரு மீள்திரும்புதலின் உறுதிசெய்தலில் உதவுவதற்கான பரந்த முயற்சிகளுக்கு பங்களிக்கிறது.

இந்தக் கண்ணிவெடி புதைக்கப்பட்ட பகுதிகள் சிலவற்றுக்கு நானே சென்றுள்ளதுடன் இங்கே மனிதாபிமானப் பணிகள் ஏன் இன்னமும் தேவை என்பதையும் நான் கண்டுள்ளேன். ஓர் பிரகாசமான இலȨக໾யின் எதிர்காலத்திற்குப் பங்களிக்கும் வேலைகளில் தங்கள் நாட்களைச் செலவிடுகின்ற – அவர்களில் பல பெண்ளையும் உள்ளடக்கிய இலȨக໾யின் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்கான ஓர் நாள் இன்றாகும்.’

Updates to this page

வெளியிடப்பட்ட தேதி 19 ஆகஸ்ட் 2013