இராணியின் பிறந்தநாள் கொண்டாட்டம்
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம், ஜூன் 19, 2014, வியாழனன்று மாட்சிமை தாங்கிய இரண்டாவது எலிசபெத் இராணியின் உத்தியோகபூர்வ பிறந்தநாளைக் குறிக்கும் முகமாக ஒரு வரவேற்பு வைபவத்தை நடாத்தியது.

British High Commissioner, John Rankin
வரவேற்பு வைபவத்தின் தொனிப்பொருள் விளையாட்டு மற்றும் இளைஞர் என்பவற்றின் மீதான விசேட கவனத்துடன், இலȨக மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கிடையிலான வலுவான உறவு என்பது பற்றியதாகவிருந்தது.
கீழே தரப்பட்டுள்ளது, வைபவத்தில் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஆற்றிய உரையின் ஒரு வடிவமாகும்.
உரை – ஜோன் ரான்கின், பிரித்தானிய உயர் ஸ்தானிகர், வெஸ்ட்மினிஸ்டர் இல்லம் ஜூன் 19, 2014
முதற் பெண்மணி ஷிராந்தி விக்கிரமசிங்க ராஜபக்ச, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர், அரசாங்கம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மேதகைமையோர், சீமாட்டிகள் மற்றும் கனவான்களே,
1954இல், இற்றைக்கு 60 வருடங்களுக்கு முன், மாட்சிமை தாங்கிய இரண்டாம் எலிசபெத் இராணி அவர்கள் இலȨகக்கு தனது முதலாவது விஜயத்தை மேற்கொண்டார். மாட்சிமை தாங்கிய இராணியின் உத்தியோகபூர்வ பிறந்த தினத்தைக் குறிக்கும் முகமாகவும், மற்றும் இலȨக மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பவற்றுக்கிடையில் நெருக்கமான பிணைப்புகளைக் கொண்டாடுவதற்காகவும், இன்று இந்த வைபவத்திற்கு உங்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்களது இரு நாடுகளும் ஒரு ஆழ்ந்த வரலாற்று ரீதியான உறவுகளைக் கொண்டுள்ளன. இடங்களின் பெயர்கள், ரயில்வே முறைமைகள் மற்றும் இங்கு கொழும்பிலும் மற்றும் அதற்கு வெளியேயும் பிரித்தானியக் காலத்திலிருந்தான பல அழகிய கட்டிடங்கள் என்பவற்றின் மூலமாக இதனை நாங்கள் ஒவ்வொரு நாளும் நினைவுபடுத்தப்படுகிறோம்.
பிரித்தானிய உயர் ஸ்தானிகராகவும், மற்றும் ஒரு ஸ்கொட்லாந்துக்காரராகவும், இன்வேர்னஸ், எடின்பேர்க் மற்றும் ஸ்டிரத்கிளைட் போன்ற பெயர்களுடனான, இலȨகயின் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் பெருந்தோட்டங்களுடனான தொடர்புகளுடன் குறிப்பிட்ட வகையில் நான் நினைவுபடுத்தப்படுகிறேன். ஸ்கொட்லாந்துக்காரர், ஆங்கிலேயர்கள், வேல்ஷ் நாட்டவர் மற்றும் வட அயர்லாந்தவர் என எங்களது ஐக்கிய இராச்சியத்தின் அனைத்துப் பகுதிகளிலுமிருந்தான மக்கள் 1948 இல் சுதந்திரம் வரைக்குமான காலத்தில் இந்தத் தீவின் மக்களுடன் ஒன்றிணைந்து ஒரு பாத்திரத்தை வகித்துள்ளனர்.
ஆனால் எங்களது உறவானது வெறுமனே ஒரு வரலாற்று ரீதியானது என்பதிலிருந்து அப்பாற்பட்டதொன்றாகும். ஐக்கிய இராச்சியம் மற்றும் இலȨக, மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகள் வலிதானதாக உள்ளதுடன் இன்று வரையும் உயிர்ப்புள்ளதாக இருக்கின்றது.
நான் அறிந்த வகையில் முதற் பெண்மணி ஓர் ஆழ்ந்த பிணைப்பைக் கொண்டுள்ள, கல்வித் துறையில், ஒவ்வொரு வருடமும் சுமார் 4000 இலȨக மாணவர்கள் எங்களது உலக தரத்திலான பல்கலைக் கழகங்களில் கல்வி பயில்வதுடன், அங்கே மிகவும் சிறப்பாக செயற்படுகின்றார்கள். செவனிங் (Chevening) புலமைப் பரிசில்களுக்கு தொடர்ந்தும் நாங்கள் பற்றுறுதியுடையவர்களாக உள்ளோம், அதனைப் பெற்றுக் கொண்ட பலரும் இலȨகயில் கௌரவமான தொழில்களுக்கு சென்றுள்ளனர். செவனிங் புலமைப் பரிசில்களைப் பெற்ற பலரும் இந்த மாலைப்பொழுதில் எங்களுடன் உள்ளதையிட்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
கொழும்பு, கண்டி மற்றும் மிக அண்மையில் யாழ்ப்பாணத்திலான அதன் மையங்கள் உட்பட, இலȨக முழுவதிலுமாக பிரித்தானியத் தராதரங்கள் மற்றும் ஆங்கில மொழிக் கற்பித்தல் என்பவற்றுக்கான வழிவகைளை பிரிட்டிஷ் கவுன்சில் தொடர்ந்தும் வழங்கி வருகிறது.
மற்றும் சுமார் 28 பல்கலைக் கழகங்கள் இலȨகயிலான அவற்றின் உள்ளூர் கல்வி வழங்குனர்கள் ஊடாக இங்கே அவற்றின் பட்டப்படிப்புக்கான வழிவகைளை வழங்குகின்றன. ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது வெளிநாட்டு நேரடி வளாகம் தெற்காசியாவில் இங்கே இலȨகயில் ஸ்தாபிக்கப் படுவதைக் காண்பதற்கு நான் எதிர்பார்த்திருக்கிறேன்.
எங்களது வர்த்தகத் தொடர்புகளும் வலுவாக உள்ளது. இன்றைய எங்களது அனுசரனையாளர்கள் உட்பட, 100க்கும் அதிகமான ஐக்கிய இராச்சிய நிறுவனங்கள் இங்கே வெற்றிகரமாக இயங்கி வருகின்றதுடன், உங்களது சிறந்த 5 முதலீட்டாளர்கள் மத்தியில் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் உள்ளது. சிறந்த தொழில் நிலைமைகளின் கீழ் உருவாக்கப்படும், உங்களது தரமான உற்பத்திகள், உயர்ந்த கேள்வியைக் கொண்டுள்ளதினால், ஐக்கிய இராச்சியம் உங்களது பெரிய ஏற்றுமதிச் சந்தைகளிலொன்றாகவும் உள்ளது. இலȨகயின் வலுவான வளரும் பொருளாதாரத்தால் அளிக்கப்படும் வாய்ப்புகளை ஐக்கிய இராச்சிய நிறுவனங்கள் தொடர்ந்து வரவேற்கின்றன. ஐக்கிய இராச்சியத்தின் சுற்றுலாப் பயணிகள் என்றுமில்லாத வகையில் அதிகரித்த எண்ணிக்கைகளில் இலȨகக்கு தொடர்ந்து விஜயம் செய்கின்றனர்.
மேலும், கண்ணிவெடி அகற்றல் மூலமாக, மக்கள் அவர்களது காணிகளுக்கு மீள்திரும்பி அதனைப் பயனுள்ள பாவனைகளுக்கு இடுவதற்கு மக்களுக்கு உதவுதல்; பொலிஸாருக்கு பயிற்சி அளித்தல் மூலமாக, ஐக்கிய இராச்சியத்தின் சமூகமயப்படுத்தப்பட்ட பொலிஸ் மாதிரியைப் பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் உங்களது பொலிஸ் அக்கடமி மற்றும் கல்லூரியை அபிவிருத்தி செய்தல்; மற்றும் இலȨகயின் வெவ்வேறுபட்ட சமூகங்களை ஒன்றுபடுத்திக் கொண்டுவரும் நல்லிணக்க செயல்திட்டங்களுக்கு உதவுவதன் மூலமாக இலȨகக்கான நடைமுறை உதவிகளை ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் வழங்கி வருகிறது.
அத்தோடு எங்களது இரு நாடுகளும் பொதுநலவாயத்தின் உறுப்புரிமைகளையும் பகிர்ந்து கொள்கின்றன. கடந்த நவெம்பரில், இலȨக பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டைக் கொழும்பில் நடாத்தியது, அதன் போது, இங்கே வெஸ்ட் மினிஸ்டர் இல்லத்தில் இராஜ குல வேல்ஸ் இளவரசரின் 65 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடியதில் நான் மகிழ்ச்சியடைந்தேன்.
பொதுநலவாய உறுப்பினர்களாக, இலȨகயும் மற்றும் ஐக்கிய இராச்சியமும் பொதுநலவாயப் பட்டயத்தில் சொல்லப்பட்டுள்ள: ஜனநாயகத்துக்கான பற்றுறுதி, மனித உரிமைகள் மற்றும் சட்டவாட்சிக்கான மதிப்பளித்தல், நிலையான அபிவிருத்தி, நல்லாட்சி மற்றும் பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்கான பற்றுறுதி போன்ற விழுமியங்களுக்கு பற்றுறுதி கொண்டுள்ளன.
பொதுநலவாயம் மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகிய இரண்டிலுமான, அத்தகைய பற்றுறுதிகளின் பின்னணிச் சூழலில், மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் ஆணைப்படுத்தப்பட்ட சர்வதேசப் புலன்விசாரணையுடன் ஒத்துழைப்பதற்கும் மற்றும் யுத்த மோதல்களின் போது அனைத்து தரப்புகளினாலும் புரியப்பட்ட குற்றங்களுக்கான நீதியை உறுதிப்படுத்தல் உட்பட, உங்களது சொந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் குறித்த பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் இலȨகயை நாங்கள் தொடர்ந்து கோரி வருகிறோம்.
எங்களது வெளியறவுத் துறைச் செயலர் வில்லியம் ஹேக் மற்றும் ஐக்கிய நாடுகள் விசேட பிரதிநிதி அஞ்சலினா ஜூலி ஆகியோரால் இணைந்து கடந்த வாரம் லண்டனில் நடாத்தப்பட்ட உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, யுத்த மோதல்களில் பாலியல் வன்முறையை முடிவுறுத்துவதற்கான பிரகடனத்தில் ஏற்று கைச்சாத்திட்ட உலகின் அனைத்து நாடுகளின் முக்காற் பங்கிற்கும் அதிகமான நாடுகளுடன் இணைந்து கொள்வதற்கும் மற்றும் பாலியல் வன்முறை நடவடிக்கைகளுக்கு குற்றவிலக்களிப்பு இல்லையென்பதை உறுதிப்படுத்துவதற்கு இலȨகயையும் மற்றைய நாடுகளையும் நாங்கள் தொடர்ச்சியாக ஊக்குவித்து வருகிறோம்.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள எங்களது இணைந்த நாடுகளுடன் ஒன்றிணைந்து உயிரிழப்புகளை ஏற்படுத்திய அண்மைய இன வன்முறைகளின் பரவுகை தொடர்பாக எங்களது கரிசனைகளை நாங்கள் வலியுறுத்துவதுடன் வன்முறையைத் தூண்டிவிடுவதைத் தடுப்பதற்கு, தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நம்புவதுடன் சமூகங்கள் பாதுகாக்கப்பட்டும் மற்றும் வன்முறைகளுக்குப் பொறுப்பானவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்படுவதையும் உறுதிப்படுத்தவும். அது தொடர்பில் அரசாங்கத்தின் உத்தரவாதத்தை நாம் வரவேற்கிறோம்.
இவை அனைத்தையும் ஒரு நட்பு நாடாக இலȨகக்கு நாம் தெரிவிக்கிறோம். அத்தகைய நடவடிக்கைகள் மூலமாக, இலȨக அதன் ஸ்திரத்தன்மை, சுபீட்சம் என்பவற்றை அதிகரித்து அதன் முழுமையான ஆற்றலை அடையுமென நாம் நம்புகிறோம்.
பிரித்தானிய உயர் ஸ்தானிகராக எஞ்சியுள்ள எனது காலத்தில், இந்த விடயங்கள் தொடர்பாக அரசாங்கம் மற்றும் இலȨக மக்களுடன் மேலும் சம்பந்தப்படுவதற்கு நான் எதிர்பாரத்திருக்கிறேன்.
அத்தோடு விளையாட்டுத் துறையிலும் கூட எங்களது உறவுகளை விரிவுபடுத்துவதற்கு நான் எதிர்பார்க்கிறேன். இங்கிலாந்தில் ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இலȨக அணியின் அண்மைய வெற்றியை நான் பாராட்டுகிறேன் மற்றும் எதிர்வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி முதலாவதைப் போன்றே பரபரப்புகொண்டதாக அமையுமென நான் நம்புகிறேன்.
மேலும் போட்டிகளுக்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி நவெம்பர் மாதத்தில் இலȨகக்கு வருமென்பதோடு, அடுத்த மாதம் இலȨகயின் தடகள விளையாட்டு வீரர்கள் எனது சொந்த நகரான கிளாஸ்கோவில் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்காக வரவேற்கப்படுவர். உங்களது பொதுநலவாய விளையாட்டு அணியின் சகல வெற்றிகளுக்கும் நான் வாழ்த்துகிறேன்.
இலȨகயில் நான் கண்டவாறும், மற்றும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் லண்டன் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் நாம் கண்டவாறும், விளையாட்டு என்பது அனைத்து வெவ்வேறு கலாச்சார மற்றும் இனத்துவப் பின்னணியிலிருந்து எவை அவர்களைப் பிரிக்கின்றது என்பதற்குப் பதிலாக எது அவர்களை ஒற்றுமைப்படுத்துகிறது என்பதைக் கொண்டாடுவதற்கு இளம் ஆட்களை ஒன்றுபடுத்திக் கொண்டு வரும் ஒரு அற்புதமான வழிமுறையாக உள்ளது.
எனவே, இந்த மாலைப்பொழுதிலான எங்களது இராணியின் பிறந்த நாள் கொண்டாட்டம் எங்களது இளம் ஆட்கள் எதனை மேற்கொண்டு சாதிக்கலாம் என்பதைக் காண்பதற்கு எதிர்பார்த்துள்ளது. இலȨக மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய இரண்டிலும் அதன் இளம் ஆட்கள் எங்களது எதிர்காலத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர் என்பதோடு எதிர்வரும் வருடங்களில் இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவுகளை அவர்களே கட்டியெழுப்புவார்கள்.
ராஜபகச அம்மணி, அமைச்சர், சீமாட்டிகள் மற்றும் கனவான்களே, எங்களது இரு நாடுகளுக்கமிடையிலான உறவுகளைக் கொண்டாடுவதில் என்னோடு இணைந்து கொள்வதற்கு உங்களை நான் வேண்டிக் கொள்வதோடு, மேதகு ஜனாதிபதி மற்றும் இலȨகயின் மக்களுக்குமான ஒரு நலம் பாராட்டி உங்களது கோப்பைகளை உயர்த்திக் கொள்ளுங்கள்.