மரண தண்டனைக்கு எதிரான உலக தினத்தை குறிக்கும் முகமாக பிரித்தானிய உயர் ஸ்தானிகரால் விடுக்கப்பட்ட அறிக்கை
வெள்ளிக்கிழமை, ஒக்டோபர் 10, 2014, அன்று மரண தண்டனைக் எதிரான உலக தினத்தைக் குறிக்கும் முகமாக, இலȨகக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரான்கின் ஓர் அறிக்கையை வெளியிட்டார்.

2014 October 10th is the fourteenth commemoration of The World Day Against the Death Penalty
“இன்று மரண தண்டனைக்கு எதிரான உலக தினத்தின் பதினான்காவது ஞாபகார்த்த தினமாகும்.
ஐக்கிய இராச்சியம் – ஐரோப்பிய ஒன்றியத்தின் அதன் சக உறுப்பு நாடுகளுடன் இணைந்து, மரண தண்டனையை இல்லாதொழிப்பதற்கான ஒரு பலமான ஆதரித்து வாதாடும் குரலாக உள்ளது. அதன் பிரயோகம் மனித கௌரவத்தை பாழ்படுத்துகிறது; கடுமையான குற்றத்திற்கான அதன் அச்சுறுத்தும் பெறுமதிக்கு முடிவான சான்று அங்கு இல்லை; மற்றும் அதன் தண்டனை விதித்தலிற்கு இட்டுச்செல்லும் நீதியின் ஏதேனும் வழுவுதல், மாற்றுவதற்கு முடியாததும் மற்றும் சீர்செய்ய முடியாததுமாகும்..
இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதம், ஐக்கிய இராச்சியத்தில் மரண தண்டனை இறுதியாக நிறைவேற்றப் பட்டதிலிருந்தான 50 வருடங்களை குறித்தது. மரண தண்டனையை இல்லாதொழித்தல் என்பது இலகுவானதாகவோ அல்லது எப்போதும் பொதுமக்களால் விரும்பப்படுகின்ற ஒன்றாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால், 1950 மற்றும் 1953 இல் இரண்டு முக்கியமான நீதி வழுவுதல் சம்பவங்கள், மரண தண்டனையின் உபயோகத்தை மட்டுப்படுத்துவதற்கு ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றத்தை ஊக்கப்படுத்தியது. அது, இறுதியாக சட்டப் புத்தகங்களிலிருந்து 1998 ஆம் ஆண்டு நீக்கப்பட்டது.
கடந்த வருடம் ஜனவரியில், சவுதி அரேபியாவில் இலȨகப் பணிப்பெண் ரிஸானா நபீக்கின் மரண தண்டனை நிறைவேற்றத்தால் இலȨக அதிர்ச்சியும் கவலையுமடைந்தது. குற்றஞ் சுமத்தப்பட்ட கொலையின் போது ரிஸான ஒரு சிறுமி என்ற காரணத்தினாலாவது குறைந்தது, கருணை காட்டுவதற்கு, ஏனைய நாடுகளுடன், ஐக்கிய இராச்சியமும் கோரியது. அவளுக்கு இரக்கம் காட்டப்படாதது குறித்து, உலகிலுள்ள பலரும், கண்ணீர் சிந்தினர்.
இந்த வருடப் பிற்பகுதியில், மரண தண்டனையை உபயோகிப்பது குறித்தான ஒரு தற்காலிகத் தடை மீதான ஐந்தாவது தீர்மானம் மீது ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை வாக்களிக்கும். இதற்கான நாட்டம் தெளிவானது: 111 நாடுகளால், மரண தண்டனை நிறைவேற்றுதல்கள் மீது ஒரு உலகளவிலான தடைக்குச் சாதகமாக இது வரையிலான ஒரு பெரிய வாக்களித்தலை 2012 கண்டது. மரண தண்டனை விதிப்பதற்கான சட்ட ஏற்பாட்டினை இலȨக இன்னமும் கொண்டுள்ள போதிலும், நீதி முறையிலான தண்டனை நிறைவேற்றுதல்கள் 1976 இலிருந்து மேற்கொள்ளப்படவில்லை. ரிஸானாவின் மரணத்தின் ஞாபகம் ஒரு தடைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு இலȨக அரசாங்கத்தை ஊக்குவிக்கும் எனவும், ஈற்றில் அதனை முற்றிலுமாக இல்லதொழித்த நாடுகளின் அதிகரிக்கும் எண்ணிக்கையுடனும் இலȨகயும் இணைந்து கொள்ளும் எனவும் நான் நம்புகிறேன்.”
#nodeathpenalty on https://twitter.com/UKinSriLanka மற்றும் https://www.facebook.com/ bhccolombo. ஆகிய வலைத்தளங்களில் மரண தண்டனைக்கு எதிரான எங்களது சமூக ஊடகப் பிரச்சாரத்தைப் பின்பற்றவும்.