வேல்ஸ் இளவரசரும் கோர்ன்வோல் சீமாட்டியும் இந்தியாவிற்கும் மற்றும் இலȨகக்கும் விஜயம் செய்ய இருக்கிறார்கள்
வேல்ஸ் இளவரசரும் கோர்ன்வோல் சீமாட்டியும் அடுத்த மாதம் இலȨகக்கு சென்று, அங்கு 2013 ஆம் ஆண்டின் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களது மாநாட்டில் மாட்சிமை தாங்கிய இராணியை இளவரசர் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்கு முன்பாக, இந்தியாவிற்கு ஒரு ஒன்பது நாள் விஜயத்தை மேற்கொள்வார்கள்.

The Prince of Wales and Duchess of Cornwall
இது இளவரசரின் இந்தியாவுக்கான மூன்றாவது உத்தியோகபூர்வ விஜயமாகும். பாதுகாத்தல், கல்வி, வியாபாரத் தொடர்புகளை வளர்த்தல், பெண்ளை வலுப்படுத்துதல் மற்றும் பயிற்சி போன்ற முக்கியமான விடயங்களில் வலுவான ஐக்கிய இராச்சிய – இந்திய பங்குடமையை முன்னேற்றுவதற்காக பரந்துபட்ட வகையிலான ஈடுபடுதல்களை அவர்கள் மேற்கொள்வர். மதப் பன்மைத்துவம், படைப்பாற்றல் மற்றும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான துடிப்பான குடும்ப பிணைப்புகள் என்பவற்றைக் கொண்டாடுவதற்கான வாய்ப்புகளையும் அவர்கள் கொண்டிருப்பார்கள்.
இது வரையில், இந்தியாவுக்கான அவர்களது மிகவும் விரிவான விஜயத்தில், இளவரசரும் மற்றும் சீமாட்டியும் டெஹ்ரடன், புதுடெல்கி, மும்பாய், புனே மற்றும் கொச்சி ஆகிய இடங்களுக்கு பயணிப்பார்கள் என்பதோடு அங்கு இந்தியாவின் முன்னணி அரசியல், வர்த்தக மற்றும் கலாச்சாரத் தலைவர்களையும் அவர்கள் சந்திப்பார்கள்.
அவர்களின் குறிப்பிட்ட நிகழ்வுகள் கேரளாவில் “யானைகள் கூடம்” என்பதற்கு இளவரசரின் ஒரு விஜயம், மதிப்புக்குகந்த டூன் பாடசாலைக்கு சீமாட்டியின் விஜயம், மற்றும் இந்திய இராணுவ அக்கடமிக்கான இருவரது விஜயம் மற்றும் பொலிவூட் திரையுலகினருடன் மும்பாயில் ஒரு பெரும் இராப்போசன விருந்தில் கலந்து கொள்ளுதல் என்பவற்றை உள்ளடக்குகின்றன. அத்தோடு அவர்கள் இந்தியாவில் இருக்கும் வேளையில் ஞாயிறு நினைவு நாளையும் கொண்டாடுவர்.
இலȨகயில், கொழும்பில் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்கள் மாநாட்டில் வேல்ஸ் இளவரசர் மாட்சிமை தாங்கிய இராணியை உத்தியோகபூர்வ ரீதியாக பிரதிநிதித்துவப்படுத்துவார். அரச தம்பதிகள் இருவரும், உத்தியோகபூர்வ ஆரம்ப வைபவம், மற்றும் பொதுநலவாய அரசாங்கத் தலைவர்களுக்காக இளவரசர் அளிக்கும் இராப் போசனத்திலும் கலந்து கொள்வார்கள். இதற்கு மேலதிகமாக, இளவரசர் பொது நலவாயத் தலைவர்கள் மற்றும் ஏனையவர்களுடன் மாநாட்டின் முக்கியமான விடயங்கள் தொடர்பாக சிறு எண்ணிக்கையிலான சந்திப்புகளை மேற்கொள்வார். இலȨகயில் இருக்கும் வேளையில், இளவரசரும் சீமாட்டியும் ஓர் மன நல வைத்தியசாலை மற்றும் ஓர் தேயிலைத் தோட்டம் என்பவற்றுக்கான விஜயங்களை உள்ளடக்கிய ஒரு உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் ஈடுபடுவர். கிறிஸ்மஸ் தினத்திற்கடுத்த தின சுனாமியின் தாக்கத்திற்கு பின்னர் இளவரசர் 2005 இல் கடைசியாக இலȨகக்கு விஜயம் செய்திருந்தார்.
2000 ஆம் ஆண்டில் டிரினிடாட்டில் மேற்கிந்தியப் பல்கலைக் கழகத்தில், ‘புதிய புத்தாயிரமாம் ஆண்டில் பொதுநலவாயம்’ எனும் தலைப்பிலான ஒரு உரையில், பொதுநலவாயத்தின் தனித்துவம் மற்றும் சம்பந்தத்துவத்தையும் இளவரசர் விபரித்திருந்தார்: “நீண்ட நாட்களாவே பொதுநலவாயத்தின் மதிப்பு மீது ஒரு இயற்கையான உணர்வு இருந்தது. ஒரு படியாக இருப்பதற்கு முயலாது கலாச்சார பன்மைத்துவங்களைக் கொண்டாடுவதற்கு அது ஊக்கப்படுத்தியது”, என்று தெரிவித்திருந்தார்.
வேல்ஸ் இளவரசர் மற்றும் பொதுநலவாயம் பற்றிய மேலும் தகவல்களுக்கு http://www.princeofwales.gov.uk/focus/realms-and-commonwealth எனும் இணையத்தள முகவரிக்கு விஜயம் செய்யவும்.