கருப்பை வாய் ஆய்வுச் சோதனை அழைப்புகள் (Tamil)
புதுப்பிக்கப்பட்டது 23 மே 2025
Applies to England
உங்கள் என்எச்எஸ் கருப்பை வாய் ஆய்வுச் சோதனைக்கு (முன்னர் ‘சிமியர் டெஸ்ட்’ என அழைக்கப்பட்டது) உங்களை அழைப்பதற்காக எழுதுகின்றோம். கருப்பை வாய் புற்றுநோயைத் தடுக்க உதவுவதற்கும் உயிர்களைக் காப்பதற்குமாக, 25க்கும் 64 க்கும் இடையிலான வயதுள்ள எல்லாப் பெண்களுக்கும் ஒரு கருப்பை வாய் உள்ள மக்களுக்கும் நாங்கள் இந்த ஆய்வுச் சோதனையை வழங்குகின்றோம்.
ஒரு மாற்று வடிவத்தில் இந்தக் கடிதத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, england.contactus@nhs.net என்பதற்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பவும் அல்லது 0300 311 22 33இல் அழைக்கவும். ஒரு நியமனத்தைப் பதிவுசெய்வதற்கு அல்லது உங்கள் சோதனை முடிவுகளைக் கேட்டுக்கொள்வதற்கு இந்த விபரங்களைப் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் உங்கள் அழைப்புக்கு அல்லது மின் அஞ்சலுக்குப் பதிலளிக்கும் ஊழியர்கள் உங்களுக்கு உதவ முடியாதவர்களாக இருப்பார்கள்.
உங்கள் நியமனத்தில்
கருப்பை வாய் ஆய்வுச் சோதனைக்கான ஒரு நியமனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு, உங்கள் குடும்ப வைத்தியரின் சிகிச்சை இடத்தைத் தொடர்புகொள்ளவும்.
பாலியல் தொடர்பான சில சிகிச்சை இடங்களும் கருப்பை வாய் ஆய்வுச் சோதனையை வழங்குகின்றன. அதிகளவில் கண்டுகொள்வதற்கு உங்கள் உள்ளூர் பாலியல் ஆரோக்கிய சிகிச்சை இடத்தைத் தொடர்புகொள்ளவும்:
அதிகளவிலான தகவலுக்கு, தயவுசெய்து மறுபக்கம் பார்க்கவும்
எதற்காக ஒரு நியமனத்தை நான் செய்ய வேண்டும்?
சில வகையிலான மனித பபிலியொமவைரஸ் (papillomavirus - HPV) எனப்பட்ட நோய் கிருமிகள் உள்ளனவா என கருப்பை வாய் ஆய்வுச் சோதனைகள் சரிபார்க்கின்றன. கருப்பை வாய் புற்றுநோய்களின் 99%க்கு மேற்பட்டவற்றில் இந்த ‘உயர்ந்த ஆபத்து’ HPV வகைகள் கண்டுகொள்ளப்படலாம். உங்கள் ஆய்வுச் சோதனை மாதிரியில் இந்த HPV வகைகளில் ஒன்றை நாங்கள் கண்டுகொண்டால், அசாதாரண அணு மாற்றங்கள் உள்ளனவா என நாங்கள் சரிபார்த்துக்கொள்கிறோம். இந்த மாற்றங்களை முன்னராகவே கண்டு சிகிச்சை அளிப்பதன் மூலமாக, கருப்பை வாய் புற்றுநோயின் பலவற்றை நாங்கள் தடுக்க முடியும்.
நீங்கள் உடலுறவு கொள்ளும் முதல் தடவையில் HPV என்பதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். இதைப் பெறுவதற்கு உள் செலுத்தும் ஆழமான உடலுறவை நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்றில்லை. நீண்ட காலமாக ஒரே பாலியல் பங்காளரை நீங்கள் வைத்திருந்தாலும் அல்லது பல வருடங்களாக உடலுறவு அற்றவராக இருந்தாலு்ம், நீங்கள் இதைப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் பாலியல் நாட்டம் எதுவாக இருந்தாலும், அல்லது HPV தடுப்பூசியை நீங்கள் பெற்றிருந்தாலும், நீங்கள் HPV என்பதைப் பெற்றுக்கொள்ளலாம்.
கருப்பை வாய் ஆய்வுச் சோதனை குறித்து நீங்கள் கவலையடைந்தால், ஆதரவு
கருப்பை வாய் ஆய்வுச் சோதனைக்கான நியமனங்கள் 5-10 நிமிடங்களை மாத்திரம் எடுக்கின்றன. ஆனால், கூடுதலான நேரத்தை நீங்கள் விரும்பினால், ஒரு நீண்ட நியமனத்தை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். ஒரு பெண் நேர்சை அல்லது மருத்துவரையும் நீங்கள் கேட்கலாம், மற்றும் ஆதரவுக்காக அறையில் இருப்பதற்கு வேறொருவரையும் நீங்கள் கொண்டுவரலாம். உங்கள் நியமனத்தின்போது, சோதனை அதிகளவில் உங்களுக்குச் சௌகரியமாக இருப்பதற்கு, ஒரு வேறு நிலையில் நீங்கள் படுத்திருப்பதையும் ஒரு விரிவுபடுத்தல் கருவியையும் நீங்கள் கேட்கலாம்.
ஒரு நியமனத்தின்போது என்ன நிகழ்கின்றது என்பது பற்றியும் HPV மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பற்றியும் அதிகளவிலான தகவல் இத்துடன் உள்ள துண்டுப்பிரசுரத்தில் உள்ளது. கணினி சார்ந்த, இலகுவாக வாசிக்கக்கூடிய மற்றும் ஏனைய மொழிகளிலான இந்தப் பிரசுரத்தின் மாற்று வடிவங்களை /cervical-screening-guide இல் நீங்கள் கண்டுகொள்ள முடியும்.
கருப்பை வாய் ஆய்வுச் சோதனையில் பங்குகொள்வது குறித்து நீங்கள் கவலையடைந்தால் அல்லது உங்களுக்கு உதவி தேவைப்பட்டால், /cervical-screening-support இல் அறிவுரையும் ஆதரவும் கிடைக்கின்றது.
அதிகளவிலான தகவல்
எப்படி மற்றும் எப்போது நீங்கள் உங்கள் சோதனை முடிவை எதிர்பார்க்கலாம் என உங்கள் ஆய்வுச் சோதனையைச் செய்யும் நேர்ஸ் அல்லது மருத்துவர் உங்களுக்குச் சொல்வார்கள், மேலும் உங்கள் சோதனை முடிவு பற்றி அவர்களுக்கும் சொல்லப்படும். உங்கள் முகவரியை அல்லது தொடர்பு விபரங்களை நீங்கள் மாற்றினால், உங்கள் குடும்ப மருத்துவரின் சிகிச்சை இடத்துக்குச் சொல்லவும்.
உங்கள் கடந்த கால கருப்பை வாய் ஆய்வுச் சோதனை எதுவாக இருந்தாலும், பின்வரும் நோய்க் குறிகளில் எதுவும் உங்களுக்கு இருந்தால், முடிந்தளவில் விரைவாக ஒரு குடும்ப மருத்துவருடன் பேசவும்:
- உங்களுக்கு அசாதாரணமான முறையில் பெண் குறியில் இரத்த கசிவு- இவற்றில் அடங்குபவை: உடலுறவின்போது, அல்லது அதன் பின்னர், மாதவிடாய் காலங்களுக்கிடையில், மாதவிடாய் நிறுத்தத்தின் பின்னர் அல்லது மாதவிடாய் காலங்களின்போது வழமைக்கு மாறாக ஏற்படும் பெருமளவிலான இரத்த கசிவு.
- உங்கள் பெண்குறி வடிதலில் மாற்றங்கள்
- உடலுறவின்போது வலி
- உங்கள் முதுகின் கீழ்ப்புறத்தில், இடுப்பு எலும்புகளுக்கிடையில் (இடுப்பு எலும்புச் சட்டம்) அல்லது உங்கள் வயிற்றின் கீழ்ப்புறத்தில் வலி.
உங்கள் நியமனத்தின்போது என்ன நிகழ்கின்றது மற்றும் ஒரு நியமனத்தை எவ்வாறு பதிவு செய்வது என்பன உட்பட, கருப்பை வாய் ஆய்வுச் சோதனை மற்றும் HPV குறித்து அதிகளவு தகவலுக்கு, என்பதற்குச் செல்லவும் அல்லது QR குறியை அழுத்தவும். மேற்கொண்டு கரிசனைகள் அல்லது கேள்விகள் உங்களிடம் இருந்தால், ஒரு குடும்ப மருத்துவருடன் பேசவும்.
உங்கள் உண்மையுள்ள,
உங்கள் குடும்ப மருத்துவரின் சார்பில், என்எச்எஸ் கருப்பை வாய் ஆய்வுச் சோதனை நிகழ்ச்சித்திட்டம்